மாநில அரசால் வழங்கப்படும் மானியங்கள்/உதவிகள்
Tamil Nadu State Haj Committee Introduction
Home >> About Haj >> Grants/assistance from State Government
மாநில அரசால் வழங்கப்படும் மானியங்கள்/உதவிகள்:
(அ) நிர்வாக மானியம்.
ஒவ்வோராண்டும் மாநில ஹஜ் குழுவிற்கு வருட நிர்வாக மானியத்தை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. பணியாளர்களுக்கு ஊதியம் அளித்தல், சொத்து வரி, மின்சார செலவினம், குடிநீர் மற்றும் வடிகால் வரி முதலிய நிருவாக செலவினங்களை தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கும் ரூ.50 இலட்சம் மானியத்திலிருந்து மேற்கொள்கிறது.
(ஆ) ஹஜ் மானியம்.
2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழக ஹஜ் பயணிகளுக்கு வழங்குவதற்காக ஹஜ் மானியமாக ரூ.6 கோடியினை ஒதுக்கீடு செய்தது. 2019 ஆம் ஆண்டிற்காக, இம்மானியத்தொகை 4397 ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் குழு மூலமாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. கொரோனா (Covid-19) பெருந்தொற்று காரணமாக ஹஜ் 2020 மற்றும் 2021-க்கான பயணத்தை சவூதி அரேபியா அரசு இரத்து செய்தது. தற்போது, இம்மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
(இ) ஹஜ் தொண்டர்கள் மற்றும் கட்டடத் தேர்வு குழுவில் உறுப்பினரை அனுப்புவதற்கு மானியத்தை ஒப்பளிப்பு செய்தல்.
ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற ஹஜ் தொண்டர்களை சவூதி அரேபியாவிற்கு அனுப்புவதற்கும், கட்டடங்களைத் தெரிவு செய்ய கட்டடத்தேர்வுக் குழுவில் பிரதிநிதியை அனுப்புவதற்குண்டான செலவினத்தை மேற்கொள்ளவும், அரசு, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு மானியங்களை அளிக்கிறது. மேற்கண்ட திட்டங்களுக்காக 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.28,70,000/-ஐ தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு தமிழ் நாடு அரசு மானியமாக வழங்கியுள்ளது.
(ஈ) இதர மானியங்கள்.
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை புரிவதற்கான பயணப்படி மற்றும் தினப்படிக்கான செலவினத்தை தமிழ்நாடு அரசு ஈடு செய்கிறது. இந்திய ஹஜ் குழு, மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முதலியவற்றால் நடத்தப்படும் அனைத்து இந்திய ஹஜ் மாநாடு மற்றும் ஹஜ் தொடர்பான கூட்டங்களில் ஹஜ் குழு அலுவலர்கள் கலந்து கொள்வதற்கான பயணப்படி மற்றும் தினப்படி செலவினத்தையும் தமிழ்நாடு அரசு ஒப்பளிப்பு செய்கிறது. மேலும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சீரிய முறையில் செயல்பட தொடரா செலவினங்களில் கணினி வழங்குதல் அல்லது பிற உபகரணங்களை அளிக்கவும் தமிழ்நாடு அரசு மானியங்களை அளிக்கிறது.