Functions of the Committee
Tamil Nadu State Haj Committee Introduction
Home >> About Haj >> Functions of the Committee
குழுவின் பணிகள்:
இக்குழுவின் முக்கியப் பணிகள் பின்வருமாறு:-
- இந்திய ஹஜ் குழுவின் வழிகாட்டுதலின்படி, ஹஜ் செய்ய விரும்பும் தமிழ்நாட்டிலுள்ள ஹஜ் பயணிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுதல்.
- மாநிலத்திற்கான ஒதுக்கீடு அளித்ததன் அடிப்படையில், தேவைப்பட்டால் குறாவின் (குலுக்கல் முறையில்) மூலம் பயணிகளைத் தேர்வு செய்து அதன் விண்ணப்பங்களை இந்திய ஹஜ் குழுவிற்கு அனுப்புதல்.
- அவ்வப்போது ஹஜ் புனிதப் பயணிகளுக்கு அறிவுரைகளை வழங்குதல் மற்றும் அவர்களிடமிருந்து பெறப்படும் தனிப்பட்ட கோரிக்கைகளுக்கு விளக்கங்களை அளித்தல்.
- மக்காவில் புனிதப் பயணிகள் தங்குவதற்கேற்ப கட்டடங்களைத் தேர்வு செய்ய பிரதிநிதி(களை) கட்டடத் தேர்வுக் குழுவில் சவூதி அரேபியாவிற்கு அனுப்பி வைத்தல்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் புனிதப் பயணிகளின் நலனைக் கவனிக்க ஹஜ் தொண்டர்களை தேர்வு செய்து சவூதி அரேபியாவிற்கு அனுப்பி வைத்தல் மற்றும் தகுதியுள்ள அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர், உதவி ஹஜ் அலுவலர் மற்றும் ஹஜ் உதவியாளர்களாக பணிபுரிய தற்காலிக அயற்பணிக்கு சவூதி அரேபியா, ஜித்தாவிலுள்ள இந்திய உதவித் தூதரகத்திற்கு பரிந்துரைத்தல்.
- ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் வழிகாட்டி, ஹஜ் மற்றும் உம்ரா கையேடுகள் ஆகியவற்றை அச்சிட்டு ஹஜ் புனிதப் பயணிகளுக்கு இலவசமாக வழங்குதல்.
- சென்னை-ஜித்தா – மதினா - சென்னை விமானங்களை நேரடியாகவும், வெற்றிகரமாகவும் இயக்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
- ஹாஜிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மும்பை இந்திய ஹஜ் குழு மற்றும் இந்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் முதலியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு முடிந்த வரையில் தீர்வு காண்பதற்கு உதவுதல்.
- பல்வேறு மாவட்டங்களில் புனிதப் பயணிகளுக்கு புத்தறிவுப் பயிற்சி மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்ததுதல்.
- புனிதப் பயணிகளுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சென்னையில் தற்காலிக தங்குமிடவசதி செய்துக் கொடுத்தல் மற்றும் புனிதப்பயணிகள் விமான நிலையம் செல்வதற்கு பேருந்து வசதி அளித்தல்.